சத்யாவை தேடி போகிறாரா வருண்? ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! மெளன ராகம் 2 சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வருண் - சத்யா கதைக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார். மெளன ராகம் 2 சீரியல் தற்போது மின்னல் வேகத்தைல் பயணித்துக் கொண்டிருக்கிறது. சத்யாவின் உண்மை பெயர் சக்தி என்பதில் தொடங்கி நிஜ அப்பா, கார்த்திக் கிருஷ்ணா என்ற உணர்ச்சிப்பூர்வமான உண்மை வெடித்த தருணம் வரை சீரியலில் அடுத்தடுத்து ஏகப்பட்ட ட்விஸ்டுகள் அரங்கேறி வருகின்றன. ஒருபக்கம் மனோகருக்கு சத்யா, கார்த்திக் கிருஷ்ணா பொய் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டனர் என்ற கோபம். மறுபுறம் ஸ்ருதி, சத்யா, மல்லிகாவை பற்றி தப்பு தப்பாக குடும்பத்தில் பரப்புகிறார். இதனால் வருணும் மனம் உடைந்து போகிறார். ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா? ஸ்ருதி, இதோடு சத்யா வர மாட்டார், வருணும் சத்யாவும் பிரிந்து விட்டார்கள் என்று ஹாப்பியாக இருக்கிறார். அதே போல், மல்லிகாவை தேடி போன காதம்பரியை கத்தி முனையில் மிரட்டி அனுப்பினார் சத்யா. கடைசியில் ஷீலா, காதம்பரி, அவரின் அம்மா எல்லோரும...