போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை
போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் காணொலி மூலம் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், ‘‘ரஷ்யாவின் கோரிக்கைகள் யதார்த்தமானது. ஆனால், இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த ஒரு போருக்கும் ஒப்பந்தத்தின் மூலமே தீர்வு காண முடியும்,’’ என்றார். 3 நாட்டு பிரதமர்கள் பத்திரமாக திரும்பினர்: கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து வேகமாக முன்னேறிய நிலையில், அடுத்த சில நாட்களில் இந்த நகரம் வீழ்ந்து விடும் என கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியாவின் பிரதமர்கள் கீவ் நகருக்கு உயிரை பணயம் வைத்து சென்றனர். அவர்கள் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிவிட்டு, நேற்று நாடு திரும்பினர். செக் குடியரசு பிரதமர் பெட்டர் பியாலா கூறுகையில், ‘உக்ரைனுக்கு உலக நாடுகள் உடனடியாக அதிகளவில் ஆயுதங்களை கொடுத்து உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ப...