இல்லத்தரசிகளுக்கு கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1000? மாணவிகளுக்கு மட்டுமே!!! கோபத்தில் இல்லத்தரசிகள்
இல்லத்தரசிகளுக்கு கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1000? மாணவிகளுக்கு மட்டுமே!!! கோபத்தில் இல்லத்தரசிகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை அவர்களுடைய வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்படும் என நிதியமைச்சர் இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வியில் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே கிடைக்கும் . ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் மேற்படிப்பில் சேரும்போது அதாவது பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்பு ஆகியவற்றில் சேரும்போது, இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூபாய் 1000 அவருட...