நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !


நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !


நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் விஸ்மயா தற்கொலை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரதட்சனை கொடுமையால் கடந்த ஆண்டில் விஸ்மயா வீட்டு குளியல் அறையில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவருடைய வழக்கு கடந்த ஒரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்த விவகாரத்தில் அவரது கணவர் கிரண்குமாரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

தற்போது இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் விஸ்மயா கணவர் கிரண் குமார் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், இவருக்கு தண்டனை பின்னர் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Related Topics:,

Click to comment

Comments

Popular posts from this blog