இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா? பதில் இதோ


இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா? பதில் இதோ


எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதற்கும் காப்பீடு உதவுகிறது. வங்கி சம்பந்தப்பட்ட எந்த விதமான கணக்காக இருந்தாலும் அதில் நாமினி விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது கணக்கின் உரிமையாளர் தனக்கு பிறகு தன்னுடைய கணக்கை யார் பயன்படுத்தலாம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது தான் நாமினி. நாமினியாக, பெற்றோர்கள், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் அல்லது சகோதரர் என்று வங்கி கணக்கின் உரிமையாளர் குறிப்பிடும் எந்த நபராகவும் இருக்கலாம். ஆனால் நாமினி பற்றிய முழு விவரமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கிற்கு மட்டுமல்லாமல் ஆயுள் காப்பீடு, கல்விக்கான காப்பீடு, டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் என்று எல்லாவற்றுக்குமே நாமினி குறிப்பிடப்பட வேண்டும். லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் நபர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தாக்கத்தால் எதிர்பார்க்காத அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்களில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் கோவிட் பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்கள்.

இதையும் படிங்க.. pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!

அதில் பெரும்பாலான குடும்பங்களுக்கு உரிய காப்பீடு இல்லாமல் நிதி ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதற்குத் தீர்வாக ஆயுள் காப்பீடு இருக்கிறது. காப்பீடு பெற்ற நபர் காப்பீடு முதிர்வடையும் காலத்திற்குள் இறந்து போனால், எவ்வளவு தொகைக்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்களோ அந்தத் தொகை நாமினிக்கு கிடைக்கும். பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை மொத்தமாக கொடுக்காமல் மாதம் மாதம் ஒரு வருமானமாக வழங்கும் திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது.

அதுமட்டுமின்றி முதலில் ஒரு கணிசமான தொகையை கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையை மாத வருமானமாக கொடுக்கும் திட்டமும் இருக்கிறது. உங்களுக்கு பொருத்தமான திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
காப்பீடு பெற்ற நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை நாமினியை சேரும். ஆனால் காப்பீட்டுக்கு நாமினியாக ஒரு நபர் மட்டும் சேர்த்தால் போதுமா இன்னொரு நாமினியை சேர்க்க வேண்டாமா என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். அதைப் பற்றிய விவரம் இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க.. மாதம் 1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுடைய 25 வயதில் இதை செய்யுங்கள்!

இன்ஷூரன்சைப் பொறுத்தவரை, நாமினியின் முழு விவரங்களை காப்பீடு வாங்கும் நபர் துல்லியமாகக் குறப்பிட வேண்டும். அதில் ஏதேனும் ஒரு சிறிய தவறு செய்தால் கூட, நாமினிக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது.

நீங்கள் காப்பீடு வாங்கும் போது, உங்கள் மைனர் குழந்தையையும் நீங்கள் நாமினியாக தேர்வு செய்யலாம். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யும் நாமினி மைனராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஒரு கார்டியனையும் நீங்கள் அப்பாயின்ட் செய்யலாம். அதாவது உங்களுடைய மைனர் நாமினிக்கு 18 வயது ஆகும் வரை அவரின் சார்பாக, கார்டியன் நாமினியாக செயல்படுவார். ஆனால் குழந்தைக்கு 18 வயதான பின்பு குழந்தை முழு நாமினியாக மாறி காப்பீட்டின் பலன்களைப் பெரும்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் எதிர்பாராமல் இறந்து போனால், அவரை நம்பி இருக்கும் பல நபர்கள் பாதிக்கப்படலாம். இதில், ஒருவரை மட்டும் நாமினியாக குறிப்பிடும் பொழுது அது மற்றவர்களுக்கு பிரச்சனையாக அல்லது பாதகமாக மாறலாம். பெரும்பாலும் பணம் தான் குடும்ப பிரச்சனைகளில் வேராக இருக்கிறது. கிளைம் தொகை நாமினிக்கு மட்டும் தான் செலுத்தப்படும். இதனால் உங்கள் குடும்பத்தில் உங்களைச் சார்ந்திருக்கும் மற்றவர்களுக்கு நாமினி செய்த நபர் உதவி செய்யாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம்.

இத்தகைய பிரச்சனையை நீங்கள் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை இன்சூரன்ஸில்ல் குறிப்பிடலாம். உதாரணமாக, உங்கள் இன்சூரன்ஸ் நாமினியாக உங்கள் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் இன்று அனைவரையுமே நீங்கள் நாமினியாக குறிப்பிடலாம். அதுமட்டுமின்றி கிளைம் தொகை எவ்வாறு செட்டில் செய்ய வேண்டும், எவ்வளவு தொகையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய விவரத்தையும் நீங்கள் பாலிசியில் குறிப்பிடலாம். இதன் மூலம் குடும்பத்தில் நிதி சம்பந்தமான பிரச்சனை ஏற்படாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog