இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை
இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை
2018-ல் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் கேஜிஎஃப் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. முதல் பாகத்தில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டதால், பார்ட் டூ எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
கடந்த மாதம் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் மெகாஹிட்டாகி, ரூ. 1200 கோடி வசூலை தாண்டியுள்ளது.
படத்தின் வெற்றிக்கு நாயகன் யாஷ் ஓர் முக்கிய காரணமாக இருக்கிறார். அவரை தவிர்த்து மற்ற யாரையும் ராக்கி பாய் கேரக்டருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, அவரது நடிப்பு படத்தில் உள்ளது.
இதையும் படிங்க - விக்ரமுடன் வாணி போஜன்... மகான் படத்தில் மிஸ் ஆன காட்சிகள்!
தற்போது கேஜிஎஃப் 3 வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரம் கேஜிஎஃப் 2 வெற்றிக்கு பின்னர் யாஷை சோஷியல் மீடியாவில் பின்பற்றுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
View this post on Instagram
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் யாஷை பின் தொடர்வோர் எண்ணிக்கை 10 மில்லியன், அதாவது ஒரு கோடியை தாண்டியுள்ளது.
இதேபோன்று பேஸ்புக்கில் 8.6 மில்லியன்பேரும், ட்விட்டரில், 1.1 மில்லியன்பேரும் யாஷை பின் தொடர்கின்றனர். ஒட்டுமொத்தமாக அவரை சமூக வலைதளங்களில் பின்பற்றும் ஐடிக்களின் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்குகிறது.
இதையும் படிங்க - Nenjukku Needhi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!
இந்த அளவுக்கு எந்தவொரு கன்ன நடிகருக்கும் சோசியல் மீடியாவில் ஃபாலோயர்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment