சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்
சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்
சன் மியூசிக்கில் ஆங்கராக பயணத்தை தொடங்கி, சீரியல் நடிகை, வெள்ளித்திரையில் துணை நடிகை என ரசிகர்களிடம் ரீச் ஆன காஜல் பசுபதி பிக் பாஸில் என்ட்ரி கொடுத்து பலரின் கவனத்தையும் பெற்றார். இவர், சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியும் கூட. ஒருசில படங்களில் பிஸியாக நடித்தவர் பின்பு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிப்பரப்பான ’கண்ணான கண்ணே’ தொடரிலும் நடித்து இருந்தார். சோஷியல மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ்களை ஷேர் செய்வார். அதுமட்டுமில்லை சில விஷயத்தில் தன்னுடைய கருத்தையும் தைரியமாக பதிவு செய்வார்.
இதையும் படிங்க.. முடிய போகும் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? இணையத்தில் பரவும் தகவல்!
இப்படி இருக்கையில், சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புடன் சேர்த்து வைக்கும்படி அவரின் வீட்டுக்கு முன்பு நின்றுக் கொண்டு புகைப்படங்களை இன்ஸ்டாவில் சேர் செய்து இருந்தார். இது மிகப் பெரிய அளவில் வைரலானது. இதற்கு முன்பே சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஆசை தான், ஆனால் எனக்கு ஆள் இருக்கு என்று ஒருமுறை புகைப்படத்தை பதிவு செய்து இன்ஸ்டாவில் ட்ரோலுக்கு ஆளானார் ஸ்ரீநிதி. இப்படி தொடர்ந்து ஸ்ரீநிதி சிம்புவை பற்றி பேசி கொண்டிருப்பது இணையத்தில் பலவிதமான விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
பப்ளிசிட்டிக்காக தான் ஸ்ரீநிதி இதுப்போன்று செய்து வருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநிதி 10 வருடம் ஒருதலை காதல் என சிம்பு வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை காஜல் பசுபதி தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “முடியாது மூடிட்டு போடி” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க.. நெஞ்சுக்கு நீதி படத்தை பாராட்டிய சென்னை மேயர் பிரியா…
இந்த போஸ்டை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், காஜலிடம் ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வருகின்றனர். அதே போல், அந்த போஸ்டிலும் பலரும் ஸ்ரீநிதியை தொடர்ந்து விமர்சித்தும் வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment