சூடுபிடிக்கிறது வி.ஜே.சித்ரா வழக்கு.. ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரணை ?.. சிக்கப்போது யார்?
சூடுபிடிக்கிறது வி.ஜே.சித்ரா வழக்கு.. ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரணை ?.. சிக்கப்போது யார்?
விஜே சித்ரா தற்கொலையை அடுத்து, ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த ஹேம்நாத் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். சித்ரா மரணத்திற்கு காரணம் சில அரசியல் தலைவர்களும் ஒரு மாஃபியா கும்பலும் தான் என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் பெற்றோர். சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என்றும், என் மகளுக்கு என்ன நடந்தது? தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்? என்பதற்கு ஹேம்நாத் பதில் சொல்லியே ஆக வேண்டும் கண்ணீருடன் கூறியிருந்தனர்.
மேலும், சித்ராவின் பெற்றோர் அந்த பேட்டியில், என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், முதலமைச்சரை சந்திக்க பல முறை மனு போட்டேன், கோட்டைக்கும் போனேன் ஆனால், அவரை பார்க்க முடியல, இந்த பேட்டியின் மூலமாக அவருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கேட்டுக்கொண்டு இருந்தனர்.
ஹேம்நாத் கூறுவது போல விஜே சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய அரசியல்வாதிகள் யார் என்றும், அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர். இதனால், ஹேம்நாத்தை மீண்டும் விசாரிக்க உள்ளனர். அதேபோல, சித்ராவின் பெற்றோரையும் விசாரிக்க உள்ளனர். இதனால், விஜே சித்ராவின் தற்கொலை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.
Comments
Post a Comment