COOK WITH COMALI : சுனிதாவை பற்றி அப்படி என்ன சொன்னார் சந்தோஷ்? தீயாய் பரவும் தகவல்!


COOK WITH COMALI : சுனிதாவை பற்றி அப்படி என்ன சொன்னார் சந்தோஷ்? தீயாய் பரவும் தகவல்!


குக் வித் கோமாளி புகழ் நடிகர் சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி சுனிதாவை பற்றி பேட்டி ஒன்றில் கூறியதாக வெளியான தகவல் இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3,  மற்ற 2 சீசன்களை காட்டிலும் பயங்கர ரீச்சில் சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீசனில் கோமாளிகளுக்கு தான் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. ஆனால் இந்த சீசனில் அம்மு, சந்தோஷ், தர்ஷன், ரோஷினிக்கு ரசிகர்கள் தனி ஆர்மி பேட்ஜை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சந்தோஷ் பிரதாப் எலிமினேட் ஆன வீக் சமூகவலைத்தளங்களில் அவரை மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டும், வைல்டு கார்டு என்ட்ரியாக சந்தோஷ் வர வேண்டும் என பலர் கோரிக்கைகளை வைத்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு கிரேஸி பாயாக மாறிவிட்டார் சந்தோஷ்.

விஜய் டிவி சீரியலால் சூர்யா படத்திற்கு வந்த சோதனை.. கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!

தற்போது இவர், நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்பம் ஒன்றில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லை வெப் சீரிஸ் , மாடலிங் துறையிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பேட்ஜை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தோஷ் பிரதாப் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் விளையாட்டாக சில கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதில் ரோஷினி அல்லது சுனிதா இவர்களில் யாரை திருமணம் செய்வீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டதாம் அதற்கு ரோஷினி என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட், சுனிதா ஓகே என்று பதில் சொன்னாராம் சந்தோஷ்.


 




View this post on Instagram






 

உடனே இந்த பதில் இணையத்தில் வேகமாக பரவ தொடங்கி விட்டது, சுனிதாவை சந்தோஷ் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார் என கிசுகிசுக்கள் உலா வர தொடங்கின. இதுக் குறித்த நிறைய டாக் வீடியோக்களும் யூடியூபில் வலம் வருகிறது. ஆனால் இதற்கு முன்பு தனது திருமணம், கெரியர், பெண் தோழிகள் பற்றி மனம் திறந்து பேசி இருந்த சந்தோஷ், எனக்கு இப்போது திருமணம் பற்றி சிந்திக்க நேரமில்லை, கெரியர் தான் முக்கியம் , யாரையும் நான் காதலிக்கவும் இல்லை என பல விஷயங்களை ஷேர் செய்து இருந்தார்.

இதையும் படிங்க..பாக்கியலட்சுமி கோபி இப்படி கூட நடிப்பாரா? ஷாக்கான ரசிகர்கள்!

எனவே, விளையாட்டாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சந்தோஷ் கொடுத்த விளையாட்டான பதில் தான் சுனிதா என்று சந்தோஷ் ரசிகர்கள் பதில் விளக்கத்தையும் தந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog