சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை போரூர் அடுத்த விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான பிரபு. இவர் தனியார் கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஓராண்டாக பிரபு வேலை இல்லாமல் இருந்த நிலையில் மது பழக்கத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனால் கிரெடிட் கார்டு மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பிரபு, வாங்கிய கடனை கட்டமுடியாமல், மனஉளைச்சல் காரணமாக நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள்... விரிவாக படிக்க >>