Posts

இளையராஜாவை தொடர்ந்து மோடி புகழ் பாடிய பாக்கியராஜ் – நெட்டிசன்களின் Reaction என்ன பாருங்க.

Image
-விளம்பரம்- பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் பேசியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். -விளம்பரம்- விரிவாக படிக்க >>

இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!

Image
உயரமாக இருப்பது என்பது சாதாரணமான விஷயம் தான், ஆனால் உலக சாதனையை உருவாக்கும் அளவுக்கு உயரமாக இருப்பது என்பதும், அதுவும் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றிணைந்து இப்படியொரு சாதனையை படைப்பது என்பதும் மிகவும் வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். அப்படிப்பட்ட உலக சாதனையைத் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பேமிலி செய்து அசத்தியுள்ளது. ட்ராப் குடும்பம், அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள எஸ்கோ பகுதியில் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் அப்பா ஸ்காட், அம்மா கிறிஸ்ஸி, மகள்கள் சவன்னா மற்றும் மோலி, மகன் ஆடம் என ஐந்து பேர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பம் தான் பலராலும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனையை படைத்துள்ளது. ஏனென்றால் இவர்கள் குடும்பத்தின் ஓவர் ஆல் உயரம் ஒரு சராசரி டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு... விரிவாக படிக்க >>

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

தலைவிரித்தாடும் பிரிவினைவாதம்... கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்புவோம் - பா.ரஞ்சித்

Image
பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் மக்கள் மத்தியில் கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்ப வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ஐ.சி.எப். அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி காலங்களில் நாடகங்களை நான் நடத்தியுள்ளேன். சினிமாவை போன்றே எனக்கு நாடகங்களையும் பிடிக்கும். நாட்டில் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் மனித நேயத்தையும் சமத்துவத்தையும் கலைகளின் வாயிலாக பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சினிமா, நாடகங்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என என்னென்ன கலைகள் உள்ளதோ அனைத்தின் மூலமாகவும் அன்பை திளைக்க செய்ய வேண்டும். விரிவாக படிக்க >>

மீண்டும் மளமளவென ஏற்றம் காணும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.40,476க்கு விற்பனை..!!

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையும் போட்டிபோட்டு அதிகரித்து வந்தது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.... விரிவாக படிக்க >>

மிஸ் திருநங்கை 2022: சென்னை சாதனா கிரீடம் சூடினார்!

Image
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடத்தப்படாத சூழலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, மறுநாள் 20-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கூவாகம் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும்... விரிவாக படிக்க >>

உயரம் குறைவாக இருப்பது தடையல்ல! 35 வேலை வாய்ப்புகளுடன் ஒருநாள் எம்எல்ஏ ஆகிய அங்கேஷ்!

Image
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 28 வயதுடைய அங்கேஷ் கோஷ்திஎன்பவர் வசித்து வருகிறார். அங்கேஷின் தாயார் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார், தந்தை தையல்காரராக இருக்கிறார்.  பட்டப்படிப்பை முடித்த அங்கேஷ் 2020 முதல் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவரது திறமையை எந்த நிறுவனங்களும் ஏற்கவில்லை. காரணம் அங்கேஷின் உயரம் 3.7 அடி. சிறு வயது முதல் பல்வேறு கேளி கிண்டலுக்கு ஆளாகிய இவர் அதனை பொருட்படுத்தாமல் எம்பிஏ பட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.  பல தடைகளை தாண்டியும் இவர் தனது இன்னல்களை முழுமையாக கடக்க முடியவில்லை. வேலை கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் உயரத்தை ஒரு குறையாக கூறி நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரவீன் பதக்கிற்கு அங்கேஷ் கோஷ்தி குறித்து தெரிய... விரிவாக படிக்க >>