தலைவிரித்தாடும் பிரிவினைவாதம்... கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்புவோம் - பா.ரஞ்சித்



பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் மக்கள் மத்தியில் கலைகளின் வழியே சமத்துவத்தை பரப்ப வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ஐ.சி.எப். அரங்கில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார். அதில் பேசிய அவர், “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக கல்லூரி காலங்களில் நாடகங்களை நான் நடத்தியுள்ளேன். சினிமாவை போன்றே எனக்கு நாடகங்களையும் பிடிக்கும். நாட்டில் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த காலகட்டத்தில் நாம் மனித நேயத்தையும் சமத்துவத்தையும் கலைகளின் வாயிலாக பரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சினிமா, நாடகங்கள், பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என என்னென்ன கலைகள் உள்ளதோ அனைத்தின் மூலமாகவும் அன்பை திளைக்க செய்ய வேண்டும்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog