2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில்.? வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்று திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும், நாளை காவிரி டெல்டா மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும். அதேபோல், சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.