டெலிவரி ஊழியரின் அந்தரங்க பகுதியை கடித்த வளர்ப்பு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்!!662190699
டெலிவரி ஊழியரின் அந்தரங்க பகுதியை கடித்த வளர்ப்பு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்!!
கடந்த சில நாட்களாவே வளர்ப்பு நாய்களால் மனதர்களுக்கு பல்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உ.பி-யில் லிஃப்டில் இருந்த சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மும்பையில் ஜெர்மன் ஷெப்பர்டு என்ற வளர்ப்பு நாயானது டெலிவரி ஊழியரின் அந்தரங்க பகுதியை கடித்துள்ளது. கடந்த மாதல் 29-ம் தேதியன்று இத்தகைய சம்பவமானது நடைப்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாயின் உரிமையாளர் டெலிவரி ஊழியரிடம் பார்சல் வாங்கும் போது, வளர்ப்பு நாயான அவரை கடிக்க முற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக நாயை வெளியே இழுத்துள்ளார்.
இருப்பினும் அவரது அந்தரங்க பகுதியை கடித்து கொதறியுள்ளது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவரின் மொத்த மருத்துவ செலவையும் நாயின் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment