குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று துவக்கம்!!


குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று துவக்கம்!!


புதுச்சேரி-குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று புதுச்சேரியில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

புதுச்சேரி அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோர்ட்டிற்கு கீழ், உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.

இத்திட்டம் இன்று 23ம் தேதி மாலை 6:00 மணியளவில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளனர்.

குடும்ப தலைவிக்கு 1,000 ரூபாய் மாதாந்திர வழங்கும் திட்டம், முதலில் 17 ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

தகுதியான பயனாளிகள் அதிகம் உள்ளதால் தற்போது 50 ஆயிரம் பேராக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 5 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், துறை செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் முத்துமீனா தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog