அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!1780246639
அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் பயங்கரமக மோதிக் கொண்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தும்,அதே சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரியும் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் , பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பேருந்தில் பயணித்தவர்களில் பத்திற்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த அச்சரபாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் பயணிகளை மீட்டெடுத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சீர் செயதனர்.
மேலும் இவ்விபத்து குறித்து அச்சரப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்தும், இவ்விபத்திற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்தது எப்படி
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, அதற்கு முன்பே லாரி சென்றுள்ளது. இதேபோல மற்றொரு பேருந்தும் பேருந்துக்கும் முன்பே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்து இரண்டு வாகனத்தையும், முந்த முயற்சி செய்ய முயன்ற போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் யார், அவர்களுடைய ஊர் என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
Comments
Post a Comment