நாளை பொது விடுமுறை - பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!


நாளை பொது விடுமுறை - பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!


பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பகவந்த் மான், சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதியான மாவீரர்கள் தினத்தை ஒட்டி, பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. 

பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலன் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என பஞ்சாப் மாநில மக்களை கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் சிலைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார். 



சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் (Shaheed Diwas) என அழைக்கப்படுகிறது. மார்ச் 23 ஆம் தேதியான நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog