சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் திட்டம்! முதல் முறையாக நம் சென்னை அரசு மருத்துவமனையில்…!!
சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் திட்டம்! முதல் முறையாக நம் சென்னை அரசு மருத்துவமனையில்…!!
இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பல உயிர்களை காப்பதாக காணப்படுகிறது. அதன்படி சிசுவின் உள்ள குழந்தைகளின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
குழந்தைகளை பெறும் தாய்மார்களின் சிக்கலில்லா சுகப்பிரசவத்துக்கும் இந்த புதிய திட்டம் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடல் குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரிசெய்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து சுகப்பிரசவம் நடைபெற இந்த பரிசோதனை பெரிதும் உதவும். இந்தத் திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக அமைந்துள்ளது.
Related Topics:stalin, சிசுவின் குறைபாடு
Click to comment
Comments
Post a Comment