சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதம் 144 தடை உத்தரவு வாபஸ்…!!!
சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதம் 144 தடை உத்தரவு வாபஸ்…!!!
Related Topics:144 தடை உத்தரவு வாபஸ், chidambaram
Click to comment
தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பக்தர் வந்து செல்வர். இந்த நிலையில் இங்கு திடீரென்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டங்கள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி கூறியுள்ளார்.
Related Topics:144 தடை உத்தரவு வாபஸ், chidambaram
Click to comment
Comments
Post a Comment