முக்கிய நகரங்கள் அனைத்திலும் Airtel 5G அறிமுகம்! ரீசார்ஜ் விலை விவரங்கள் இதோ! ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை: இதுவரையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எல்லா டேட்டா திட்டங்களிலும் 5ஜி நெட்வொர்க்கை அனுபவித்து வந்தனர். இப்போது அனைத்து போஸ்ட்பெய்டு பயனர்களும் அன்லிமிடேட் 5G டேட்டாவை அனுபவிக்க முடியும். ப்ரீபெய்ட்டு வாடிக்கையாளர்கள் ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா பிளானில் ரீசார்ஜ் செய்து அன்லிமிடேட் 5ஜி சேவையைப் பெறலாம். ஏர்டெல் 599 பிளாட்டினம் பிளான்: ஏர்டெல் நிறுவனம் அண்மையில் ரூ.599 என்ற போஸ்ட்பெய்டு பிளாட்டினம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பிரைமரி கனெக்ஷனும், கூடுதலாக ஒரு இலவச ஆட்-ஆன் கனெக்ஷனும் பெறலாம். அதாவது வாடிக்கையாளர்கள் ரூ.599 பிளானில் மொத்தம் 2 இணைப்புகளைப் பெறுகிறார்கள். இந்த பிளானில் 105ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 2 பேர் கொண்ட சிறிய குடும்பம் அல்லது தம்பதிகளுக்கு வசதியாக இருக்கும். இந்தியாவில் ஏர்டெல் 5ஜி கிடைக்கும் மாநிலங்களும், நகரங்களும்: அசாம்: ஜோர்ஹாட், தேஜ்பூர், குவஹாத்தி, சில்சார், திப்ருகர், டின்சுகியா, போங்கைகான், ஹ...